பொள்ளாச்சி நேதாஜி சாலையில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு அறிவித்தபடி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்ட விழாவில் நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச. தர்மராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் இரா.சித்ராதேவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஜெய் லாப்தீன் . துணைத்தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவிகளிடையே பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வெள்ளை நடராஜ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக துணை செயலாளர் கவிஞர் முருகானந்தம் ஆகியோர் காமராஜர் குறித்து பல்வேறு கருத்துக்களை பேசினர்.
இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் நடனம் பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது .இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.தர்மராஜ் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.