தூத்துக்குடியில் நேற்று மாலை 5 மணி அளவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நலப் பணியாளர் சங்கம் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் பணி நியமன ஆணையே இல்லாமல் வாய்மொழியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள எங்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும், 2009 முதல் நாங்கள் பெற்று வந்த கால முறை ஊதியத்தை கணக்கிட்டு தற்பொழுது கால முறை ஊதிய ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும், நாங்கள் வாங்கும் மாத ஊதியம் வெறும் 7500 ரூபாய் அதில் 7500 ஊராட்சி மூலமாகவும் 2500 ரூபாய் ஒன்றிய அலுவலகத்தில் சேர்த்து வழங்க வழிவகை செய்ய வேண்டும், 2022 முதல் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற இறந்த பணியாளர் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கிட வேண்டும் என்ன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் மக்கள் நல பணியாளர்கள் அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்தார்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குள் எங்களுக்கு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் எங்களுடைய சங்கம் வாக்குகளின் மூலம் எதிர்ப்பை தெரிவிப்போம்.
இந்த நிகழ்ச்சியில் ராமசுப்பு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி மாவட்ட செயலாளர் ஜெயந்தி மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் மாநில துணை பொதுச்செயலாளர் வீரப்பன் மாநில செயற்குழு உறுப்பினர் என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.