செப்டிக் டேங்க் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!!!
கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாரதா மில் ரோடு பகுதியில் உள்ள 98 ஆவது வார்டை சார்ந்த ராஜமுத்தையா நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு முன்பு செப்டிக் டேங்க் குழாய் பதிப்பதற்காக தோன்றிய பள்ளத்தை சரியாக மூடவில்லை தற்பொழுது மழை பெய்து வருவதினால்,
அந்தப் பகுதி மிகவும் சேரும் சகதியுமாக மாறி வாகனங்களும் நடந்து செல்லும் மக்களும் கோவிலுக்கு வருபவர்களும் மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில் உள்ளது. எனவே சரிவர மூடப்படாமல் சேரும் சகதியுமாக காணப்படும் இந்த பகுதியை உடனடியாக சரி செய்து தருமாறு இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆகியோர் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன் மற்றும் விக்னேஷ்பாபு.