வல்லநாடு அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்!!!
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லநாடு கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது .
இதற்காக பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் இன்று காலை 8 மணி அளவில் கிராம மக்கள் பெண்கள் குழந்தைகள் என பல்வேறு தரப்பு மக்களும் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் மற்றும் வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் ஊர் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.