கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் ஒன்றியம் நலப் பள்ளி சின்கோனா பகுதியில் உள்ளது இந்த பள்ளி வளாகத்தை சுற்றிலும் புதர்கள் மண்டி இருக்கிறது. அப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது இந்தப் பகுதியானது சிறுத்தை யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.
அப்படி உள்ள சூழ்நிலையில் வனவிலங்குகள் வந்து உள்ளே பதுங்கி இருந்தால் வெளியே தெரிய வாய்ப்பு இருக்காது இதனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் பள்ளி குழந்தைகள் பயின்று வரும் நேரங்களில் சிறுத்தை யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பள்ளி வளாகம் பகுதிக்குள் வராமல் தடுப்பதற்கு.
வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றும் சின்கோனா பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள புதர்களை அகற்றவும் அப்பகுதி பொதுமக்கள் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.