கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலம்பட்டி அருகே உள்ள விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட மாணவர் ஆட்சி மன்ற குழுவின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இப்பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ரத்தினம் நினைவு அறக்கட்டளை தலைவர் திரு மூகாம்பிகை ரத்தினம் அவைகளும் மற்றும் பள்ளி தாளாளர் அருட்தந்தை தாமஸ் அவர்களும், பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய் அவர்களும் , பள்ளியின் பொருளாளர் அருட்தந்தை நிமிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறப்பாக நடைபெற்ற விழாவில் மாணவ மாணவியர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதனை அடுத்து உரையாற்றிய பள்ளி நிர்வாகிகள் பதவி பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் வாழ்க்கையிலும் எட்டாத பல உயரங்களை எட்டி பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதனை அடுத்து மாணவ மாணவியரை பள்ளி நிர்வாகம் வெகுவாக பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது. இப்ப பதவி ஏற்பு விழா, எங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக மாணவ மாணவியர் தெரிவித்தனர். அதோடு அவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் வெற்றி பெற உறுதுணையாக நிற்கும் பள்ளியின் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.