தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வீரன் சுந்தரலிங்கம் நகரில் பயணியர் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்த கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் கிராம மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார் . சுந்தரலிங்கம் நகரில் உள்ள குடிநீர் தொட்டி சேதம் அடைந்திருப்பதாக கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள், அதை உடனடியாக சரி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கன்வாடி பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார் அந்தப் பள்ளியில் பவர் பிளாக் தளம் அமைக்க அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள், வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்கள் , பாஞ்சாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜா , அவர்கள் ஒன்றிய கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார் அவர்கள், வீரன் சுந்தரலிங்கம் பேரவை தலைவர் சக்தி முருகன் அவர்கள், கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் அவர்கள், வருவாய் அலுவலர்கள், சுந்தரலிங்கம் வாரிசு பொன்ராஜ் அவர்கள், கிராம மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.