தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் குளத்தூர் ஊராட்சி குளத்தூர் பேருந்து நிலையத்துக்குள் கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாக மேற்கூரை கட்டிடம் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்: குளத்தூர் பேருந்து நிலையத்துக்குள் கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் கூல்ட்ரிங்க்ஸ், மொபைல் சர்வீஸ், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது, இந்த கடைகள் செயல்பட்டு வரும் வணிக வளாக கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு அன்று முதல் இன்று வரை எந்த பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாததால் கட்டிடம் பெரும் சேதமடைந்து சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குளத்தூர் பகுதியில் தற்போது அதிக காற்று வீசி வருவதால் சில தினங்களுக்கு முன்பு வணிகவளாக கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென கீழே விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை .
தற்போது அதிக காற்று வீசி வருவதுடன் மழை காலம் தொடங்க உள்ளதால் வலுவான நிலையில் உள்ள கட்டிடம் மழை நீரில் முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலை உள்ளது எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து புதிய வணிக வளாக கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.