தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வாலசமுத்திரம் கிராமத்தில் முன்னால் சென்ற லாரியின் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். ஒட்டப்பிடாரம் அருகே கடம்பூர் கோடங்கால் பகுதியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி வயது 23 இவரது தகப்பனார் பெயர் செல்லையா . மந்திரமூர்த்தி தனது மோட்டார் பைக்கில் தமிழ்நாடு உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிவிட்டு தூத்துக்குடியில் இருந்து குறுக்குசாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் 23.45 மணிக்கு வாலசமுத்திரம் அருகே வரும்போது முன்னால் மரபலகை லோடு ஏற்றுக்கொண்டு கந்தசுப்பு வயது 30 தகப்பனார் பெயர் முருகன் தெற்கு தெரு புதுப்பட்டி ஸ்ரீவைகுண்டம் சேர்ந்த கந்தசுப்பு தூத்துக்குடியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் வாலசமுத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் பைக் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் தடுமாறி கீழே விழுந்த மந்திரமூர்த்தி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் மந்திரமூர்த்தி மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.