ஒட்டுடன்பட்டி கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான கலையரங்கத்திற்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம் சி சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி அருகே ஒட்டன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் தொடங்கி வைத்தார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அக்காநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மற்றும் கருங்குளம் யூனியன் சேர்மன் ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை நாட்டினார்கள்.
பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையில் பணிபுரியும் பெண்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்தனர் உடனே வழங்க பரிந்துரை செய்தார் , கிராமத்திற்கு குடிநீர் வசதி மற்றும் போக்குவரத்து வசதி வேண்டும் என எம்எல்ஏ அவர்களிடம் மனு அளித்தனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அக்கா நாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் அய்யாதுரை, அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
முனியசாமி, ஒட்டப்பிடாரம்.