தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பக்கத்தில் வேன் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்து விபத்துக்குள்ளானது இதில் 15க்கு மேற்பட்டவர்கள் காயம் என தகவல். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக வேன் ஒன்றில் 20க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேன் ஓட்டப்பிடாரம் அருகே புதூர் பாண்டியபுரம் டோல்கேட் அருகில் உள்ள மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் டயர் வெடித்து வேன் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்டோருக்கு காயம் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.