தமிழக முதல்வர் அவர்கள் தமிழத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை காவல் துறையினர் முன்னேடுத்து உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை செல்வபுரம் அடுத்த அசோக் நகர் மேல் நிலை பள்ளியில், செல்வபுரம் குற்ற புலனாய்வு ஆய்வாளர் ராஜேஷ்வரி மற்றும் உததி ஆய்வாளர் சுபாஷினி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு, போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர், இதில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து,
போதை பொருட்களை பள்ளி வளாகத்தில் விற்பனை செய்ய கூடாது, மீறி விற்பனை செய்பவர்களை எந்த மாதிரியான அனுகு முறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்து பள்ளி மாணவர்களை போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்க வைத்தார், இதில் பள்ளியில் உள்ள, மாணவ மாணவியர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.