தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா கீழமுடிமன் கிராமத்தில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடைபெற்றது, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை எம் சி முருகேச பாண்டியன் அவர்கள் தொழில் அதிபர் அயிரவன்பட்டி மற்றும் ராஜேஷ் வேல் திமுக ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் துவக்கி வைத்தனர் . சவரிமுத்து நினைவு நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது இதில் சின்ன மாடு பூஞ்சிட்டு தேன்சிட்டு என மூன்று பிரிவிலாக நடத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சின்ன மாடு பந்தயத்தில் 26 ஜோடி காளைகள் கலந்து கொண்டன, இதில் முதல் பரிசு வெற்றி பெற்ற காளை வேலாங்குளம் கண்ணன் ரூபாய் 20,000 வழங்கியவர் ராஜேஷ் வேல் திமுக ஒன்றிய கவுன்சிலர், இரண்டாவது பரிசு வெற்றி பெற்ற காளை விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் வழங்கியவர் ரூபாய் 15000 ராதாகிருஷ்ணன் விஜயநராயணன் , மூன்றாவது பரிசு வெற்றி பெற்ற காளை கீழமுடிமன் ஐயப்பன் காளை ரூபாய் 10000 வழங்கியவர் ராஜேஸ் சத்திரம் , நான்காவது பரிசு வள்ளியூர் ஆனந்த தேவர் காளை ரூபாய் 4000 வழங்கியவர் பரமசிவம் கீழமுடிமன்.
அனைத்து பரிசுக்கான வெற்றிக் கோப்பைகளை வழங்கியவர் பிரசாத் கீழமுடிமன். பின்னர் தேன்சிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. அதில் 21 ஜோடி காளைகள் கலந்து கொண்டன, முதல் பரிசு ரூபாய் 10000 வழங்கியவர் மாரிமுத்து தொடக்க வேளாண்மை வங்கி கீழமுடிமன் வெற்றி பெற்ற காளை மாநட்டுமாடன் துணை கன்னக்கட்டை , 2வது பரிசு ரூபாய் 8000 வழங்கியவர் கோவிந்த பெருமாள் வெற்றி பெற்ற காளை தெட்டம்பட்டி, 3வது பரிசு ரூபாய் 6000 வழங்கியவர் வேதநாயகம் வெற்றி பெற்ற காளை தேனி மாவட்டம் நாகஜோதி , 4வது பரிசு ரூபாய் 3000 வழங்கியவர் சுரேஷ் கீழமுடிமன் வெற்றி பெற்ற காளை சுந்தரபாண்டியன் கூத்தலூரணி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பூஞ்சிட்டு பந்தயத்தில் அதிக அளவில் மாடுகள் கலந்து கொண்டன, இந்த மாட்டுவண்டிப் போட்டியை ராஜேஷ் வேல் திமுக ஒன்றிய கவுன்சிலர் , மாரிமுத்து துவக்கி வைத்தனர் . அதை இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 15000 வழங்கியவர் காமராஜ் வெற்றி பெற்ற காளைகள் சீவலப்பேரி துர்கம்பிகா மற்றும் SRS சமியத்து , 2வது பரிசு ரூபாய் 10000 வழங்கியவர் ஆரோக்கியம் வெற்றி பெற்ற காளைகள் சங்கரப்பேரி பண்டி மற்றும் விக்கரபண்டி சிங்கிலிபட்டி , 3வது பரிசு ரூபாய் 8000 வழங்கியவர் கதிர்வேல் , மகேஷ் வெற்றி பெற்ற காளைகள் கண்ணன் வேலாங்குளம் , கீழச்செய்த்தலை லட்சுமணன், ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு ஒட்டப்பிடாரம் காவல் துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது .
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.