கோவையில் முதல் முறையாக பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்…

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 26, 2023 – பார்வையற்றோர் அதிகம் வாழும் தாயகமாக இந்தியா திகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி உலகில் உள்ள 37 மில்லியன் பார்வையற்றோரில் 15 மில்லியன் இந்தியாவில் உள்ளனர்.கண் மருத்துவமனைகள் அதிகம் உள்ள நகரமாக கோவை உள்ளது. அருகில் உள்ள மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ளோர் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், கோவையில் பார்வையற்றோர் பயன்பெறும் வகையில் வசதிகள் கொண்ட தொழில் பயற்சி அளிக்கும் நிறுவனம் ஒன்றும் இல்லை. கண் பார்வை சிகிச்சைக்காக வசதிகளைக் கொண்டுள்ள இந்த நகரம், பார்வையற்றோருக்கான தொழில் பயிற்சியில் பின்தங்கியே உள்ளது. கண் மருத்துவர்களும், அருகில் உள்ள கண்நோயாளிகளும் குறிப்பாக இளம் வயதினருக்கு கோவையில் வேலை தேடுவது சவாலாகவே உள்ளது.
கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப், பார்வையற்றோர் பயன்பெரும் வகையில் சமுதாயத்தில் அவர்களும் ஒரு நேர்மறையான பங்களிப்பாளர்களாக மாற, தொழில் பயிற்சிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் கொண்ட தொழில் மையத்தை துவக்குகிறது. அவர்களும் சமுதாயத்தில் தரமான வாழ்க்கை வாழ உதவுகிறது. இந்த மையம். உப்பிலிபாளையம் பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பு என இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேவைகளை அடிப்படையாக கொண்டு டாக்டர் ரோகிணி சர்மாவை தலைவராக கொண்டுள்ள கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப், புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. ரோட்டரி கிளப்பின் செயலாளராக முர்துஷா ராஜா, திட்ட ஆலோசகராக ஆஷிஷ் ஷர்மாவும், திட்டத்தின் தலைவராக முனிஷ் ஷா, சமுதாய சேவை தலைவராக நிதின்ஷா, சுபாஷ் கோயங்கா மற்றும் மாவட்ட முதன்மை திட்ட தலைவராக ராஜேஷ் நந்தா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். புராஜெக்ட் உமிட்; வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை ஊட்டும் ஒளிக்கீற்றாக மட்டுமின்றி, பார்வையற்றோர் வாழ்வில் மறு மலர்ச்சியையும், சமுதாயத்தில் ஒரு மதிப்பையும் பெற வைத்து, நாட்டின் கட்டமைப்பில் பங்கு வகிக்கிறது. இது அவர்களை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் பெருமளவில் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இது எங்களது ஸ்மைல் திட்டத்தின் ஒரு அங்கமாகவும், மாவட்ட ஆளுனர் டிஆர் விஜயக்குமார் அவர்களின் நோக்கமாகவும் திகழ்கிறது.

இந்த மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிரந்திக்குமார் பாடி இ.ஆ.ப., துவக்கி வைத்தார். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3201, மாவட்ட இயக்குனர் எஸ்.கோகுல் ராஜ், துணை ஆளுநர் எஸ்.வெங்கட் மற்றும் ஜிஜிஆர், டாக்டர் என். செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த பயிற்சி மையத்தில் 20 பார்வையற்ற மாணவர்கள் 3 மாத பயிற்சிக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலவசமாக 3 வேளை உணவும் தங்குமிடமும் ரொட்டி வங்கி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதனை பாரத் குப்தா மற்றும் நாரயண் குப்தா ஆகியோர் வழங்குகின்றனர்.
இங்குள்ள கணிணி பரிசோதனைக் கூடம், கணிணிகள், மேஜைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இவற்றை புவக் பேய்ட் தலைவராக செயல்பட்டு வரும் இந்திய ரவுண்ட் டேபிள் அமைப்பின் கீழ் உள்ள கோயம்புத்தூர் ரவுண்ட் டேபிள் ஸ்பார்க் 323 வழங்கியுள்ளது. துவக்க விழாவில், ரவுண்ட் டேபிள் பகுதி 7 தலைவர் பங்கஜ் பாய்யா, துணைத்தலைவர் ரகுலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பார்வயற்ற இந்த பட்டதாரி மாணவர்கள், கம்ப்யுட்டர்களில் பயிற்சி பெறுவதோடு, தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வதோடு, நோக்குநிலை, இயக்கத்திலும் சிறப்பு பெறுவர். 3 மாத பயிற்சி நிறைவில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் பெறுவர். இதனை, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில், தென்னிந்திய திட்ட இயக்குனர் லயன் பி மனோகரன், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் திட்ட இயக்குனர் டாக்டர் எம். பிரபாவதி, ஒருங்கிணைப்பாளர்கள் டி.சதாசிவம், திரு.கே கணேஷ் உள்ளிட்டோர் நடத்துகின்றனர்.
பயிற்சியாளராக பார்வை திறனற்ற திரு. சாம் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் பெறுவார். சம்பளம் பெறும் முதல் பயிற்சியாளரும் இவரே. இதற்கான ஆதரவினை பெஸ்ட் கார்ப்பரேஷன் மற்றும் லீப் கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் திருமதி சரசு அளிக்கிறார்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp