பொள்ளாச்சியில் 1949 ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராஜர் பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்காக கிரையம் பெறப்பட்ட கதவு எண் 86 வெங்கட்ராமன் வீதி,பொள்ளாச்சி என்ற விலாசத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் மீது ஜனதாதளம் உரிமை கொண்டாடியதில் காங்கிரஸ் கட்சிக்கே சொந்தமானது என்ற சார் ஆட்சியர் அவர்களின் 5/7/22 தேதியிட்ட உத்தரவின் பேரில் மீட்கப்பட்டதுடன் பாழடைந்த கட்டிடமாக இருந்ததை புனரமைக்கப்பட்டு 10/8/22 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ் அழகிரி Ex MP அவர்களால் திறக்கப்பட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமாக செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் மீது ஜனதா தளம் கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில்7/11/22அன்று தடையான பெற்றனர் அதனை தொடர்ந்து 3/12/22அன்று வருவாய்துறையால் மீண்டும் காங்கிரஸ் அலுவலகம் பூட்டி சீல் வைக்க பட்டு சாவியை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்… இதனிடையே உயர்நீதிமன்றத்தில் வழக்கு 24/4/23அன்று முடித்து வைக்கப்பட்டது உயர்நீதிமன்ற தீர்ப்பில் மீண்டும் சார் ஆட்சியர் அவர்கள் இருதரப்பையும் அழைத்து விசாரணை செய்து உரியவர்களிடம் சாவி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி சார்ஆட்சியர் அவர்கள் விசாரணை முடிந்து 16/8/23 தேதியில் 1949ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்காக பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கிரையம் பெறப்பட்ட பொள்ளாச்சி கதவு எண் 86,வெங்கட்ராமனன் வீதியில் உள்ள அலுவலகமானது காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது என்றும் அதன் சாவியை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் காவல் ஆய்வாளர் அவர்கள் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு வழங்க பட்டது அதன்படி இன்று 28/8/23 பொள்ளாச்சி வட்டாட்சியர் அவர்களிடமிருந்து பொள்ளாச்சி கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே.பகவதி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலக சாவியை பெற்றுக்கொண்டார்,
உடன் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் வக்கீல் ரவி, ஆனைமலை வடக்கு வட்டார தலைவர் கருணைமகாலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் கள் பத்ரகிரி,மோகன்ராஜ், மாசிலாமணி, கோவை தெற்கு மாவட்டOBC பிரிவு தலைவர் ஜம்பு என்கிற நடராஜன், பொள்ளாச்சி நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் குமரன் நகர் காளிமுத்து, வட்ட மலை வேலு ஆகியோர் உடனிருந்தனர் தொடர்ந்து வருவாய் துறை மூலம் பூட்டி சீலிடப்பட்ட கட்சி அலுவலகத்தை உதவி காவல் ஆய்வாளர் முன்னிலையில் VAO அவர்கள் சீலை நீக்கி தந்தார்கள் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. ஜோதிமணி மாவட்ட பொருளாளர் வெங்கடேஸ்வரா விசு,மாவட்ட துணைத் தலைவர்கள் சிற்பிஜெகதீசன், பால குருசாமி, பிரபாகரன்,
மதுக்கரை கிழக்கு வட்டார தலைவர் பழனிசாமி, ஒ
கே. மண்டபம் பேரூராட்சிகவுன்சிலர் கண்ணன் ,மாவட்ட பொதுச்செயலாளர்கள் தென்னரசு,சுப்புஆறுமுகம் VSRKமோகன், அன்சர் , , நஜிமுதீன், ஓ. கே. மண்டபம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் பொள்ளாச்சி நகர வட்டார நிர்வாகிகள் SSR.நடராஜன், மகேந்திரன், கோபால் காந்தி,கடல்புறா நடராஜ்,அய்யாசாமி, மூர்த்தி,அறிவெளி வெள்ளியங்கிரி,வக்கம்பாளையம் மணிகண்டன் வக்கீல் செந்தில் குமார்,ஆறுக்குட்டி, சுதன், ரவிசேகர், முபாரக்,சேதுபதி,செட்டிபாளையம் பிரகதி, சமத்தூர் நாகராஜ், சக்தி கார்டன் மகாலிங்கம்,மாரப்பகவுண்டன்புதூர் சின்னு , உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-சுரேஷ்குமார்.