கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சோக்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 8, 10 ஆம் வகுப்பு தோச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்.
நேரில் வருகை புரிவோருக்கு இந்நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு வயது உச்சவரம்பு, சிறப்பு கட்டணம் இல்லை. பயிற்சியில் தோச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழில் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ. 750 உதவித் தொகை, புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம் ரூ. 1, 000, விலையில்லா மடிக்கணினி இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9865128182, 9499055692, 8838158132, 9442239112 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.