கல்லுாரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் செப்.,5ல் சிவகங்கையிலும், செப்., 8 ல் காரைக்குடியிலும் நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் கூறியதாவது: பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப கல்லுாரிகளில் படிக்கும் சிவகங்கை மாவட்ட மாணவர்களுக்கு வங்கிகள்மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. செப்., 5 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும், செப்., 8 அன்று காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணிவரை வங்கி கல்விக்கடன் முகாம் நடைபெறும்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in இணையதளத்தில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். கல்விக்கடன் முகாம் அன்று விண்ணப்ப நகல் மற்றும் 2 போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், இருப்பிட, வருமானம், ஜாதி சான்று, பான்கார்டு, ஆதார் கார்டு நகல், கல்லுாரியில் இருந்து பெறப்பட்ட உறுதி சான்று, கல்வி கட்டண விபரம் மற்றும் 10, பிளஸ் 2, இளநிலை பட்டபடிப்பிற்கான மதிப்பெண் சான்று நகல், முதல் பட்டதாரி சான்று, கவுன்சிலிங் மூலம் பெற்ற சேர்க்கை உத்தரவுடன் பங்கேற்று பயன் பெறலாம், என்று தெரிவித்துள்ளார்.
-தமிழரசன், மேலூர்.