மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கி இணங்க அரசின் தொலைநோக்கு திட்டம் தாய்மார்களின் அரசின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜமீன் கோடங்கிபட்டியில் விளாத்திகுளம் எம் எல் ஏ மார்கண்டேயன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
காலை உணவுப் திட்டம்:
நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது . ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்படும்.
இந்நிகழ்வில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன்,தங்கவேல், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், கோடங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, குருவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, கிளைச் செயலாளர் செந்தில் வேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜஸ்டின்பிரபாகரன் உட்பட ஆசிரிய ஆசிரியைகள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.