தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் டிஎம்பி மேக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர் சிவபெருமாள் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான ஆகஸ்ட் 15 ஆம் நாள் நாடு முழுவதும் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 77வது சுதந்திர தினம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதலில் தேசிய கீதம் இறைவணக்கம் சிறப்பு விருந்தினர்கள் வரவேற்பு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி, இனிப்புகள் வழங்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார் , பின்னர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் தூத்துக்குடி வடக்கு சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன். இந்த விழாவில் பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் பாஸ்கர் அவர்கள், தலைமையாசிரியர் வனஜா மங்களசெல்வி அவர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அனந்தப்பன், தூத்துக்குடி வடக்கு சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் , தூத்துக்குடி வடக்கு சிறுபான்மை மாவட்ட செயலாளர் உலகையா மாவட்ட அம்மா பேரவை இனை செயலாளர் சுப்பையா ஒட்டப்பிடாரம் ஊராட்சி கழக செயலாளர் கனகராஜ் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.