பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் ரயில்வே கேட் அருகே மீன் கரைசாலையில் அமைந்துள்ள வளர்ந்தாயமரத்தில் கடந்த ஒன்றை வருடங்களாக தண்ணீர் பிரச்சனையால் இப்பகுதி பொதுமக்கள் பெரும் பிரச்சனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று தண்ணீர் கேட்டு ரோட்டுக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வளர்ந்தாயமரம் RTO செக்போஸ்ட் அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு உண்டானதோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.