மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்க பதிவில், செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, தமிழுக்குச் சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய் என்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
“வேத் வித்யாவை” ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஷ்டானின் (வேத சமஸ்கிருத வாரியம்) 5 பிராந்திய மையங்களை மத்திய அரசு விரைவில் அமைக்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, பத்ரிநாத், துவாரகா, ஜெகநாத், ராமேஸ்வரம் மற்றும் குவாஹாட்டில் அமைக்கப்படும் என்றுள்ளார். இந்த நிலையில், தமிழுக்கு சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய் என மத்திய கல்வி அமைச்சகத்துக்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் திரு மோடி அவர்கள் உலகில் அனைத்து இடங்களையும் தமிழ் தமிழ் என்று முழக்கமிட்டாலும் தமிழுக்கு மிகவும் குறைவான அளவிலே சொற்ப நிதி ஒதுக்கியும் சமஸ்கிருதத்திற்கு அதைவிட பன்மடங்கு நிதி ஒதுக்கியும் செயல்படும் சூழலில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்களது எழுப்பிய கண்டனம் குறிப்பிடத்தக்கது.
–தமிழரசன், மேலூர்.