பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பொள்ளாச்சி சிஞ்சு வாடி பகுதியில் பணிபுரிந்து வரும்வட மாநில தொழிலாளியின் மூன்று வயது குழந்தை (சாகர்) தன்னுடைய விரலை மோட்டாரில் உள்ளே வைத்ததினால் தன்னுடைய வலது கட்டை விரல் இரண்டு துண்டாக ஆகிவிட்ட நிலையில் ஒன்றரை மணி நேரம் கழித்து அழைத்து வந்தனர்.
அவர்கள் துண்டான விரலை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து எடுத்து வந்தார்கள். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர். மீரா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை பல மணி நேரம் ஆகும் என்பதால் மயக்க மருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் ,செவிலியர்கள் ,அறுவை அரங்க ஊழியர்கள் போன்ற குழுவை உடனடியாக தயார் செய்யப்பட்டது. தேவையான ரத்த பரிசோதனை எக்ஸ்ரே போன்றவை உடனடியாக எடுக்கப்பட்டது அறுவை அரங்கு தயார் செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டி இருந்தது .
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமையில் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கார்த்திகேயன் , ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கமித்ரா எட்டு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை தொடர்ச்சியாக செய்தார். அவருடன் அறுவை சிகிச்சை துறை பட்ட மேற்படிப்பு மாணவி டாக்டர் மணிமேகலை இந்த அறுவைசிகிச்சை செய்தார்.
இவருடன் மற்ற துறையை சார்ந்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்தார்கள். மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் அருள் மணியும் மற்றும் டாக்டர் கிருத்திகா இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள்.
எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இசக்கி முருகன் குழந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர் சிவசங்கர் மற்றும் டாக்டர் அமுதா மற்றும் செவிலியர்கள் இரண்டு குழுவாக செல்வி மற்றும் ஜெயலலிதா இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள்.
முதலில் கே ஒயர் மூலம் விரலை இணைத்து இதற்குப் பின் ரத்தக்குழாய்கள் இணைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிவில் விரலுக்கு ரத்த ஓட்டம் வருவது கண்டுபிடிக்கப்பட்டு ,குழந்தை அறுவை சிகிச்சை பகுதியில் சிகிச்சைக்குப் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் கட்டைவிரல் எப்படி நல்ல நிலைக்கு திரும்புகிறது என்று மூன்று நாள் மற்றும் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும் தற்போது குழந்தை நல்ல நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு உள்ளது.
கண் அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தும் மைக்ரோஸ்கோப் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த அறுவை சிகிச்சை தேசிய கை அறுவை சிகிச்சை தினமான ஆகஸ்ட் 23ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை முதல்முறையாக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பொள்ளாச்சி மருத்துவமனை மருத்துவர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர். பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சாதனை மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நோயாளி நலச் சங்க உறுப்பினர் திரு.வெள்ளை நடராஜ் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினர் திரு.MK.சாந்தலிங்கம் வாழ்துக்கள் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு பத்திரிகை சார்பாக வாழ்துக்கள் அனைத்து மருத்துவர்களுக்கும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.