திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் 17 வயது பட்டியல் சாதி மாணவனை ஜாதி ரீதியிலாக வன்கொடுமைக்குள்ளாக்கி, அவனையும் அவனது தங்கையையும் வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் இதுவரை 7 சிறார்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்த முனியாண்டி – அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள மிகப் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியில் இவர்கள் இருவரும் 12ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் இருவரையும் வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிக்க சாதி மாணவர்களும் அதே பள்ளியில் படித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
8ம் வகுப்புவரை சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்த நிலையில், பட்டியல் சாதி மாணவரான சின்னதுரை அங்கு பாதுகாப்பான சூழல் இல்லாத காரணத்தால் 9ஆம் வகுப்பில் வள்ளியூரில் உள்ள பள்ளியில் சேர்ந்துள்ளார். அவரது தங்கை 6 வகுப்பு முதல் இப்பள்ளியில்தான் படித்து வருகிறார்.
சின்னதுரை, அவரது ஊரிலிருந்து அரசு பேருந்தில் வள்ளியூர் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து பள்ளிக்கு நடந்து வருவது வழக்கம். அவர் வரும்போது ஊரிலிருந்து ஆதிக்க சாதி மாணவர்களும் அதே பேருந்தில் வருவார்களாம். அவர்களுக்கும் சேர்த்து சின்னதுரைதான் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவார்களாம்.
வள்ளியூர் பேருந்து நிலையத்திலிருந்து, பள்ளிக்கூடம் வரும்வரை ஆதிக்க சாதி மாணவர்களின் புத்தக பைகளை சின்னத்துரையிடம் கொடுத்து சுமக்க விடுவார்களாம். அவர்தான் அதையும் சுமந்து கொண்டு பள்ளிக்கு நடந்து வந்துள்ளார். பள்ளிக்கு வரும் வழியில் அவரிடம் ஏவல் பணிகளை செய்யச் சொல்வது, வீட்டுப்பாடங்களை எழுதச் சொல்வது என அவரை ஆதிக்க சாதி மாணவர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும், சின்னதுரையின் தாயை ஏளனமாகப் பேசுவதுடன், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளனர் அந்த மாணவர்கள். அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அவர் யாரிடமாவது கூறினால் அவரை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த அவர் இது குறித்து யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் சின்னதுரை பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, சின்னதுரையின் வகுப்பாசிரியர், அவரது அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ‘சாதிச் சான்றிதழ் எடுக்கச் சென்றுவிட்டதால் அவன் பள்ளிக்கு வரவில்லை’ என்று அவரது அம்மா முதலில் கூறியுள்ளார்.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் அவன் பள்ளிக்கு வராததால் மீண்டும் வகுப்பாசிரியர் அவரது அம்மாவிடம் தொலைபேசியில் கேட்டுள்ளார். அதற்கு ‘ஆதார் அட்டையில் திருத்தம் செய்யச் சென்றுவிட்டதாகவும்’ வேறு பல காரணங்களையும் கூறி சமாளித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளிக்கு வரும் வழியில் ஆதிக்க சாதி மாணவர்களால் அனுபவித்த கொடுமைகள் குறித்து சின்னத்துரை அவரது தாயிடம் முதலில் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று அம்மா கேட்டதற்கு, தனக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்று மட்டும்தான் கூறியுள்ளார். மேலும், குடும்ப வறுமையை போக்க சென்னைக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார் சின்னதுரை.
இதையடுத்து வெட்டப்படுவதற்கு முந்தைய நாள் 8ஆம் தேதி, சென்னைக்கு செல்ல ரயில் நிலையம் சென்று பயணச்சீட்டும் எடுத்துள்ளார். அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் வைத்து சின்னத்துரையைப் பார்த்த அவரது சித்தியின் மகன், படிப்பதற்கு பயந்துதான் சின்னத்துரை சென்னை செல்ல முயல்வதாக எண்ணி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போதுகூட ஆதிக்க சாதி மாணவர்களால் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவர் யாரிடமும் கூறவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் சின்னத்துரையின் சித்தி சுமதி, ஏன் பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை காரணத்தை கூறுமாறு அவரிடம் கண்டிப்பாகக் கேட்ட பிறகுதான் அவன் நடந்தவற்றை கூறியுள்ளான். உடனடியாக அவரது அம்மா தொலைபேசி மூலம் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அவருக்கு நடந்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார். இதையடுத்து சின்னதுரையையும், அவரது அம்மாவையும் அடுத்த நாள் பள்ளிக்கு வருமாறு ஆசிரியர் அழைத்ததையடுத்து ஆகஸ்ட் 9ஆம் தேதி இருவரும் பள்ளிக்கு வந்தனர்.
ஆதிக்க சாதி மாணவர்களால் அவருக்கு என்னென்ன கொடுமைகள் நடந்ததோ அவை அனைத்தும் தலைமை ஆசிரியையிடம் எழுதி தரப்பட்டது. அவர் எழுதி தந்ததை பார்த்து திகைத்த தலைமை ஆசிரியை, புகார் மனுவை வாங்கிக் கொண்டு அவரை வகுப்புக்குச் செல்ல பணித்துள்ளார். அன்று அந்த ஆதிக்க சாதி மாணவர்களின் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா எனபதால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அடுத்த நாள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டிக்க ஆசிரியர்கள் முடிவு செய்தனர். ஆனாலும் கூட அந்த ஆதிக்க ஜாதி மாணவர்களுக்கு சின்னத்துரையின் புகார் குறித்து தகவல் சென்றுள்ளது. அன்று மாலையே, அதே வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சின்னத்துரையை அழைத்து, ‘நீ எப்படி எங்களைப் பற்றி புகார் சொல்லுவ?’ என மிரட்டியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சின்னதுரையின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றிருந்ததால் சின்னதுரையும், அவரது சகோதரி சந்திரா செல்வியும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அன்று இரவு 9.30 மணிக்கு தரையில் அமர்ந்து சின்னத்துரை இரவு உணவருந்திக் கொண்டிருந்த நிலையில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அந்த வீட்டிற்குள் புகுந்த ஆதிக்க சாதி மாணவர் கும்பல், சின்னதுரை எழுந்திருக்கூட முடியாத அளவுக்கு சரமாரியாக வெட்டியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தங்கை சந்திரா செல்வி ஓடிச்சென்று அவர்களைத் தடுக்க முயன்றபோது, அவர் மீதும் அந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் (59) மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அரிவாளால் வெட்டியதால் படுகாயமடைந்த சின்னத்துரை மற்றும் சந்திரா செல்வி இருவரும் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் தங்கள் ஜாதிதான் உயர்வானது என்று கழிப்பறைகளில் எழுதி வைப்பது, பெண் ஆசிரியைகள் பாடம் எடுக்கும் போது விசில் அடிப்பது, வகுப்பறையில் உள்ள பென்ச் டெஸ்குகளில் ஜாதி பெயரை எழுதி வைப்பது என மாணவர்களால் தொடர்ந்து பள்ளியில் ஜாதி ரீதியிலான பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் காவல்துறையினரை பள்ளிக்கு வரவழைத்து சில பிரச்சனைகளில் மாணவர்களை எச்சரிக்கை செய்ய சொல்லும் சம்பவங்களும் நடந்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
சின்னத்துரையை வீடு புகுந்து வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீது பள்ளியில் ஏற்கனவே பல புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிவிடலாம் என ஆசிரியர்கள் பல முறை கோரிக்கை வைத்த நிகழ்வுகளும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இனியும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஊரில் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும், காவல்துறை கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஊர் மக்கள் வைக்கின்றனர்.
இதனிடையே சம்பவம் குறித்து நாங்குநேரி காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 3 சிறார்கள் கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். சாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் மாணவர்களிடம் தலை தூக்குவதை தடுக்க, அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– பாரூக்.
One Response
வாழ்க பெரியார் பூமி வளர்க திராவிட நாட