கோவை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனால் தொடங்கபட்ட ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் 2. O என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் துறையினர் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பள்ளி குழந்தைகளையும் விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக வடிவமைத்து வருகின்றனர்.
மேலும் பள்ளிக்கூடம் 2. 0 என்ற திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தங்களை தாங்களே சில பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தற்காப்புக் கலை பயிற்சியும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது அதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் அடுத்த, ஸ்ரீ. கே. ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 30 மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டது.
அம்மாணவிகளுக்கு கோவை கோபாலபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ‘காவல் துறையினருடன் ஒரு நாள்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் காவலர்கள் வாகனத்தில் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுத படை வளாகத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை பார்வையிட்டு கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் உள்ள காவல் துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.