பொள்ளாச்சி நகராட்சி 26வது வார்டு நகர மன்ற உறுப்பினர் எம் கே சாந்தலிங்கம் முன்னெடுப்பில் பொள்ளாச்சி என் ஜி எம் கல்லூரி இடம் இணைந்து பொதுமக்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு சித்த மருத்துவ முகாம் பல்லடம் சாலையில் உள்ள
வாணியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது முகாமில் பலர் கலந்துகொண்டு மருத்துவர் ராஜீவி சபரிநாதன் MD (A) அவர்களிடம் ஆலோசனை பெற்றனர்.
மருத்துவர் அவர்கள் நோய் தன்மை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் உணவே மருந்து உணவின் மூலம் எப்படி எல்லாம் என்பது குறித்து தெளிவாகவும் விளக்கமாகவும் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதிகிருஷ்ணன் அவர்கள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி நகர செயலாளர் துரைராஜ் மாவட்ட தலைவர் தேவ்ஆனந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் பேரவை வெள்ளை நடராஜ் .
கொ.ம.தே.க , கவின்,கௌரி,அர்ச்சனா பாப, திமுக வட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், போஜராஜன் நகரமன்ற உறுப்பினர்கள் டேஸ்டி பாலு,துரைபாய் ,இளமாறன் மற்றும் பாத்திமா அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.