என்.ஜி.எம். கல்லூரி தேசிய மாணவர் படையினர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் சங்கம் இணைந்து 2023 ஆகஸ்ட் 4 மற்றும் 5 தேதிகளில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா பணியில் ஈடுபட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குப்பை கொட்டுவதை குறைத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தூய்மை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிப்பதே இந்த பணியின் முக்கிய குறிக்கோள்.
இந்த நிகழ்வில் தேசிய மாணவர் படையினர், கல்லூரி முதல்வர் முனைவர். முத்துக்குமரன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு.வெள்ளை நடராஜன் மற்றும் 26வது வார்டின் உறுப்பினர் சாந்தலிங்கம் ஆகியோர் பங்குபெற்று, தூய்மை இந்தியா திட்டத்திக்கான உறுதிமொழியை ஏற்றனர்.
பின்னர், மாணவ மாணவியர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பிரிவு, குழந்தைகள் நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையம் (மகப்பேறு வார்டு) ஆகிய இடங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இன்றும் நாளையும் 40க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ மாணவியர்கள் மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.