கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து சரவணம் பட்டி போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியே வந்த 2 பேரிடம் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலளித்தனர். உடனே போலீசார் அந்த 2 பேரையும் சோதனை செய்தபோது, போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விசாரணையில் அவர்கள் பீளமேடு புதூரை சேர்ந்த நிதீஷ்குமார் (வயது 22), திருச்செங்கோட்டை சேர்ந்த பூபதி (26) என்பதும் தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் பெங்களூரு பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை வாங்கி கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர் களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.