கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது.
பயிற்சி பள்ளி முதல்வரும், ஐ. ஜி. ஸ்ரீஅஜய் பரதன் உத்தரவின் பேரில் துணை கமாண்டன் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுவாசமாலா, கோஷ், நேபால் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், பயிற்சியாளர்கள் கலந்துகெண்டு பயிற்சி அளித்தனர்.
மேலும் டிரம், கேன், மரத்துண்டுகளை கொண்ட படகை தயார் செய்து, அணையின் மைய பகுதிக்கு கொண்டு சென்று நீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருவது மற்றும் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்று தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். 60 மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு, 11 பேர் பயிற்சி அளித்தனர். இதை அணையில் நின்றவாறு சுற்றுலா பயணிகள் பார்த்தனர். இதையொட்டி அணை பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.