கோவையில் மரபணு கோளாறுகள் உடைய 2 குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 4 வயது சிறுவனுக்கு மரபணு குறைபாட்டினால் நோய் எதிர்ப்புசக்தி இல்லாமை காரணமாக கடுமையான இரத்த சோகை மற்றும் நுரையீரல், மூளை தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல் எடுத்து மாற்று சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
ஸ்டெம் செல் தானம் செய்பவர்களுக்கு HLA எனப்படும் Human Leukocyte Antigen பொருத்தமுடைய உடன் பிறந்தவர்கள், அல்லது பாதி HLA பொருத்தமுடைய பெற்றோர், அல்லது ரத்த சம்பந்தம் இல்லாத வெளி நபராகவோ கூட இருக்கலாம். அதன்படி, இந்த 4 வயது சிறுவனுக்கு அவருடைய அண்ணனின் HLA பொருத்தமாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள், அண்ணனின் ரத்தத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்களை பாதிக்கப்பட்ட சிருவனுக்குய் கீமோதெரபி கொடுத்து செலுத்தப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை முடித்து 6 மாதங்கள் ஆகிய நிலையில், எந்த நோய்த்தொற்றும் இல்லாமல் நன்றாக சிறுவன் உள்ளார். இதேபோல், 2.5 வயது சிறுவன் ம்யுகோபோலிசாக்கரிடோசிஸ் (Mucopolysaccharidosis type 2) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த குழந்தைக்கு அவசியமான ஒரு என்சைம் உடலில் உற்பத்தி இல்லாமல் போனதால், குழந்தையின் முகம், எலும்புகள், கல்லீரல் மற்றும் மண்ணீரலிக் வீக்கம் போன்ற பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
இந்த குழந்தைக்கும் எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல் எடுத்து மாற்று சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சிறுவனின் உடன் பிறந்தவரின் HLA பொருந்தாததால், ஹைதராபாத்தில் உள்ள ஒரு HLA பொறுத்தமுடைய ஸ்டெம் செல்கல்ய் சேகரிக்கப்பட்டு, அவசர நிலையாக விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு செலுத்தப்பட்டன. இந்த சிறுவனும் சிகிச்சை முடிந்து 10 மாதங்களாகும் நிலையில், ரத்தத்தில் தற்போது என்சைன் உற்பத்தி நலமாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, மரபனு, ரத்தம் சம்மந்தப்பட்ட நோய்களை 90 சதவீதத்துக்கும் மேல் குணப்படுத்துவதாகவும், ஆரோக்கியமான ஒருத்தரின் ரத்தத்தில் இருந்து எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்களை எடுத்து நோயாளிக்கு கொடுப்பதால் ரத்த புற்றுநோய், தலசீமியா, எலும்பு மஜ்ஜை செயலிழப்பு, நோய் எதிர்ப்பு குறைபாடுகள், என்சைம் கோளாறுகள் போன்ற நோய்கள் குணமடையும் எனக்கூறும் மருத்துவர்கள் சில வகை புற்றுநோய்களில் அதிக அளவு கீமோதெரபி கொடுத்த பிறகு மீண்டும் ரத்தம் உற்பத்தியாக நோயாளியின் சொந்த ஸ்டெம் செல்களே உட்செலுத்தப்படும் என்றும், அல்லது மற்றொரு நபரின் ரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ஆரோக்கியமான ஸ்டெம் செல்கள் நோயாளிக்கு செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதனால், ஆரோக்கியமாக உள்ள அனைவரும் ஸ்டெம் செல் தானமாக தர பதிவு செய்யலாம் என்றும், மரபணு கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை முற்றிலும் நோயை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறை என்கின்றனர் மருத்துவர்கள்.
-சீனி, போத்தனூர்.