மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் கலவரத்திற்கு காரணமான பிஜேபி ஒன்றிய – மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் மேலூர் தாலுகா குழு சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மிகப்பெரிய கலவரங்கள் நடந்து வருகிறது. அதில் பல உயிர்கள் பறிக்கப்பட்டும், பல்வேறு மக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்திருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில்தான் இந்தியர்களுககுத் தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய ஒருசம்பவம் நடைபெற்று சமூக வலைத்தளங்களில் காட்சிகளாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில், ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொது பரவி வருகிறது. கடந்த மே மாதம் 4 ம்தேதி மணிப்பூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து இந்த வீடியோவை பார்க்கும் போது காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தில் நாம் வாழ்கிறோமா என்று அளவிற்கு அந்த பெண்களை சித்திரவதை செய்து நிர்வாணமாக அழைத்து செல்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளை பெறும் பாசிச அரசியலை பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை போன்று எத்தனை சம்பவங்கள் நடந்தது என்று தெரியவில்லை, அனைத்தையும் மூடி மறைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. மேலும் மத்திய அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தவறினால், இதை நாங்கள் கையில் எடுப்பொம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது மன்னிக்கமுடியாத மிகப்பெரிய குற்றம். இந்த கலவரம் ஆரம்பித்த உடனேயே தடுத்து இருந்தால். இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்காது. இந்தியர்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டதற்கு பின்னால் தான் மாநில பாஜக அரசு பேச ஆரம்பித்திருக்கிறார்கள், இதுவும் கண்டனத்திற்குரியது என நிர்வாகிகள் தங்களது கட்டணத்தை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எஸ்.பி.மணவாளன், எம்.கண்ணன், பி.எஸ்.ராஜாமணி, என்.பழனிச்சாமி, எஸ்.பாலா ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கண்டன உரைகளை தெரிவித்தனர். ஆர்.சி.சபை அருட் தந்தை அந்தோணி பாக்கியம் உட்பட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கண்டன குரல்களை வெளிப்படுத்தினர்.
– தமிழரசன், மேலூர்.