பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம்
பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மீனாட்சிபுரம் அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(48). பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி, (45), மகன் மோஹித்(18) பிளஸ் 2 முடித்து விட்டு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க, அடுத்த மாதம் செல்ல இருந்தார்.
சம்பவத்தன்று பரமேஸ்வரன் தனது சொகுசு காரில் கனரக வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் மகனுக்கு தேவையான பொருட்கள் வாங்க பெங்களூருக்கு சென்றார். அவருடன் மனைவி சித்ராதேவியும், மகன் மொஹிந்த்தும் சென்றனர். அங்கு அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து ஊருக்கு திரும்பினார்கள். காரை மோஹித் ஓட்டிக் கொண்டிருந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று அதிகாலை, 3 மணியளவில் கோவை – பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது தாமரைக்குளம் பகுதியில் மரம் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்தது. இதனை சற்றும் எதிர்பாராத மொஹிந்த் ஓட்டி வந்த கார் வந்த வேகத்தில் மினி லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மோஹித் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சித்ராதேவி மீட்கப்பட்டு பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.