மலைப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களின் புகுந்து பயிர்களை நாசம் செய்தும் பொது மக்களை அச்சுறுத்தியும் வந்த மக்னா யானை மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு வால்பாறை அடுத்துள்ள சின்னக்கல்லார் பகுதியில் விடப்பட்டது.
இந்த சூல்நிலையில் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட சின்னக்கல்லார் எஸ்டேட் வனப்பகுதிக்குள் மக்னா யானையை விடப்பட்டதால் இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள சிங்கோனா பகுதி பொதுமக்கள் வனத்துறையை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் அப்பகுதியில் இரவு நேரங்களில் கரடி சிறுத்தை யானை போன்ற கொடிய மிருகங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன மற்றும் விஷத்தன்மை உள்ள பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த மக்னா யானையை இந்தப் பகுதியில் கொண்டு வந்து விட்டுள்ளது. எங்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது ஆகையால் மக்னா யானையை பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.