இது குறித்து தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் கூறுகையில் ஏற்கனவே கரடி, சிறுத்தை, புலி, காட்டுமாடு, யானை உள்ளிட்ட வன விலங்குகளால் அச்சம் கொண்டு வேலை செய்து வருகிறோம் இந்நிலையில் மக்னா யானையை
எங்கள் பகுதிக்கு கொண்டு வந்து விட்டதால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளோம்.
வீடுகளிலும் குடியிருக்க முடியவில்லை வேலை செய்யும் இடத்திலும் வேலை செய்ய முடியவில்லை. ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லை ஊதியம் குறைவு, மருத்துவ வசதி என குறைபாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்காக குரல் கொடுப்பவர்கள் உங்களைப் போன்று ஒரு சிலர் இருப்பதால் சிறிதளவு மகிழ்ச்சியில் உள்ளோம் நாங்கள் வேலை செய்யும் எஸ்டேட்டில் மேனேஜர் உண்மையை பேசும் எங்களை போன்றோரை பழிவாங்குவார். எங்களை வனவிலங்கு தொல்லையில் இருந்து பாதுகாத்து கொடுங்கள் என்று வேதனையுடன் கூறினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாமும் இவர்களின் வேதனையை அறிந்து சில தொழிலாளர்களை கேட்கும்பொழுது நம்மை கண்டு நிர்வாகம் ஏதும் பழிவாங்கி விடும் என்று ஓடி விட்டனர். மக்னா யானை தொடர்பாக வால்பாறை வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டபோது சரியான முறையில் தொலைபேசி இணைப்பு கிடைக்கவில்லை. இதுவும் இப்பகுதியின் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இதன் மூலமாவது அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு அது விரும்பி உண்ணும் உணவுகளை பயிரிட்டு அடர்ந்த வனத்திற்குள்ளேயே மக்னா யானையை வைத்து பாதுகாக்க வேண்டு மென்று பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறோம். என்கின்றார் வால்பாறை சார்ந்த ஒரு சமூக ஆர்வலர்.
-P.பரமசிவம் வால்பாறை.