உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ்முனியன் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டதை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 25/08/2023 அன்று நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று 29/08/2023 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.துணை வட்டாட்சியர் சரவணபெருமாள், நில எடுப்பு வட்டாட்சியர்கள் சேதுராமன், வித்யா, கிருஷ்ணகுமாரி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் விளாத்திகுளம் தாலுகா அலுவலக ஊழியர்கள் மற்றும் நிலை எடுப்பு ஊழியர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-க.ராஜேஷ், விளாத்திகுளம் கிழக்கு.