தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மகளிர் உரிமைத்தொகை 2ஆம் கட்ட முகாம் நேற்று தொடங்கியது, இந்த முகாம் சிலோன் காலனி இ சேவை மையத்தில் , கவர்னர்கிரி மற்றும் சுந்தரலிங்கநகர் பகுதிகளில் பள்ளி அருகிலும் நடைபெறுகிறது.
டோக்கன், விண்ணப்பங்கள் தவிர ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகிய 4 அடிப்படை ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான ரூ 1000 மகளிர் உதவித்தொகை திட்டம் வரும் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேரை திட்டத்தின் பயனாளிகளாக இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் முதல் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பலரின் பங்களிப்போடு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஐந்து ஏக்கர் நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், முதியோர் ஓய்வூதியம், தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.