கோவை மாவட்டம் வால்பாறை வணிகர் சம்மேளனம் தலைவர் ரவீந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்துகிறோம், ஜி எஸ் டி வரி ,செலுத்துகிறோம். தொழில் வரி, செலுத்துகிறோம்.
இது அனைத்தும் முழுமையாக மத்திய , மாநில, அரசுக்கு செல்கிறது. ஆனால் எங்களுக்கு வால்பாறை நகராட்சியினால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமலும், கடைக்குள்ப் மழை நீர் கசிந்து வருகிறது. மார்க்கெட் பகுதியில் நடப்பதற்கு சமமான நடைபாதை கிடையாது. இதனால் பகுதிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றன. தினந்தோறும் குப்பைகளை அல்லாமல் கடைகளுக்கு முன்பு கிடைப்பதால் இப்பகுதி இருக்கும் வணிகர்கள் மிகவும் சிரமப்படுகின்றன.
இதனால் கடைக்குள் துர்நாற்றமும் வீசுகிறது. கடைக்குள் அமர முடியவில்லை ஒரு புறம் மழை நீர் கசிவு இது தொடர்பாக ஒவ்வொரு முறையும் நகராட்சி அதிகாரியிடம் குப்பை கிடக்க இடங்களை புகைப்படங்கள் எடுத்து அனுப்பினால் மட்டுமே செய்கிறார்கள் இப்பகுதியில் இருக்கும் நகராட்சி அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் தனது தேவைக்காக எதிர்பார்ப்பதால் அங்கங்க கடைகளுக்கு முன்பாகவும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியாமல்
திணறுகிறார்கள் ஒவ்வொரு கடைக்காரர்களும் அவர்களுடைய குப்பைகளை அங்கங்கே கடைக்குள் ஓரமாக ஒரு பையில் போட்டு விட்டால் மார்க்கெட் முழுவதும் சுத்தமாக இருக்கும் இந்த குப்பைகளை உண்ணுவதற்கு இப்பகுதி கால்நடைகளும் வருகிறது. இதனால் இப்பகுதிக்கு வாகனத்தில் வரும் வியாபாரிகள் பொதுமக்களும் சிரமப்படுகின்றன அதுவும் தற்போது மழை காலம் என்பதால் குப்பைகள் அங்கங்கே கிடைக்கிறது.
இது இப்பகுதி இருக்கும் சிறிய வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு வரும் பொதுமக்களுக்கும் மார்க்கெட் பகுதியில் துர்நாற்றம் இல்லாமல் குப்பைகளை அங்கங்கே போடாமல் ஒவ்வொரு கடைகளிலும் அருகில் சாக்குப் பையில் குப்பைகளை போட்டு வைக்க கடைக்காரர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
காலையும் மாலையும் இரு வேலைகளும் குப்பைகளை அகற்ற வேண்டும் பாதுகாப்பான நடை பாதைகளை அமைக்க வேண்டும். மழை நீர் கசியாமல் கடைக்குள் வருவது சரி செய்ய வேண்டும். தமிழகத்திலே வால்பாறை நகராட்சி தான் அதிகளவு அதிகாரிகளும், அலுவலர்களும் உள்ளனர் ஆனால் எந்த ஒரு கட்டமைப்பு நகராட்சிக்கு உடையதாக இல்லை என்பதை தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-P.பரமசிவம் வால்பாறை.