ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் கால்பந்து விளையாட்டின் குரூப் சுற்றில் இந்தியா – சீனா அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன. சீனாவின் ஹாங்சுவில் ஆசிய விளையாட்டு செப். 23ல் துவங்குகிறது.
இதில் கால்பந்து போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் 4 சிறந்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.
அந்த வகையில் ஆடவா் கால்பந்து குரூப் சுற்றில் செவ்வாய்க்கிழமை இந்தியா – சீனா ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
ஆசிய அளவில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனா பலம் வாய்ந்த அணியாகவே இருக்கிறது. கடந்த முறை 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த இரு அணிகளும் சந்தித்தபோது சீனா 2-0 கோல் கணக்கில் வென்றிருந்தது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.