மரக்கன்றுகளை கைகளில் ஏந்தியபடி யோகாவின் சுப்த வீராசனம் செய்த விவேகம் பள்ளி மாணவ, மாணவிகள் சோழன்உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். யோகாவில் வஜ்ஜிராசனம் போலவே சுப்த வீராசனம் சீரணக் கோளாறுகளை சீர் செய்து, வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை சரி வர இயங்கசெய்கிறது. இந்நிலையில் நமது உடல் பாகங்களை சீராக்குவது போல பூமி வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவையில் பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து மரக்கன்றுகளை கைகளில் ஏந்தியபடி சுப்த வீராசனம் செய்து அசத்தியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சரவணம்பட்டியில் உள்ள விவேகம் பள்ளியின் யோகா ஆசிரியை திலகவதி ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் விவேகம் சி. பி. எஸ். இ. பள்ளியில் பயிலும் சுமார் ஆறு வயது முதல் பதினைந்து வயது வரையுள்ளமாணவ, மாணவிகள் தொடர்ந்து 30 நிமிடம் சுப்த வீராசனத்தை மரக்கன் றுகளை ஏந்தியபடி செய்தனர். 96மாணவ, மாணவிகள் இணைந்து செய்த இந்நிகழ்வு சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. தொடர்ந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தமாணவ, மாணவிகளுக்கு சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நீலமேகம் நிமிலன், தலைமை செயற்குழு உறுப்பினர் நீலமேகம் ராஜன், கோவை மாவட்ட தலைவர் பாலமுரளி கி்ருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் இன்று வழங்கி கவுரவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.