கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் நாங்கள் வால்பாறை அருகே கல்லார் செட்டில்மெண்ட் தாய்முடி என் சி அருகே குடியிருக்கிறோம். எங்களுக்கு சாலை வசதிகள் முற்றிலும் கிடையாது பாதுகாப்பான குடியிருப்புகள் கிடையாது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவசர சிகிச்சைக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வாகனங்கள் கூட போவதற்கு சாலை இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் அரசு மூலம் பல இடங்களில் பசுமை வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு இல்லை எங்களின் குடியிருப்பை சரி செய்ய முடியாமல் மலையிலும் வெயிலிலும் காற்றிலும் கஷ்டப்படுகிறோம். தற்பொழுது அரசு மூலம் சிறிய சிறிய உதவிகள் செய்தாலும் மிக முக்கியமாக பாதுகாப்பான குடியிருப்பு மருத்துவ சிகிச்சை பார்ப்பதற்கும் அடிப்படை சாலை வசதி அமைத்து கொடுத்தால் நல்லது.
மேலும் வால்பாறை பகுதிகளில் நல்ல நிலையில் உள்ள சாலைகளை சிமெண்ட் போடுகிறார்கள் அதை நிறுத்திவிட்டது எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும். அரசு மூலம் பசுமை வீடு திட்டத்தின் வீடுகளை கட்டிக் கொடுக்கவும் எங்களுக்கும் மின்சாரம் இல்லாமல் இவ்வளவு நாள் வாழ்ந்து வருகிறோம். மின்சார வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இது குறித்து நாமும் அவர்கள் இருக்கும் பகுதியில் கள ஆய்வு செய்த பொழுது உண்மையிலே இன்று சந்திரானே விண்ணில் ஆய்வு செய்து அங்கே என்னென்ன கனிம பொருட்கள், என்னென்ன இருக்கிறது, மக்கள் குடியேறலாமா என்று ஆய்வு செய்கின்ற அரசு, இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
முற்றிலும் நடைபாதை மிகவும் பரிதாப நிலையில் குண்டும் குழியுமாகவும் நடக்கவே முடியாமல் வயதான முதியோர்கள் சிரமப்படுகின்றன. உடல்நிலை சரியில்லை என்றாலும் அவசர சிகிச்சை பார்க்க முடியாமல் சிரமப்படுகின்றன. குடியிருப்பும் பாதுகாப்பற்று மின்சார வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றன. இந்த நவீன காலத்தில் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு பாதுகாப்பான குடியிருப்பு வசதியும் மின்சார வசதியும் சாலை வசதியும் செய்து தர வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம்.
இந்த நவீன காலத்திலும் இவர்கள் வாழ்வாதாரம் உயரவில்லை என்றால் இனி வருங்காலங்களும் கஷ்டம். எனவே இது கருத்தில் கொண்டு பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும் என்று நாளைய வரலாறு ஊடகத்தின் சார்பாக பொது நலத்துடன் கேட்டுக் கொள்கிறோம்.
-P.பரமசிவம், வால்பாறை.