தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நீராவி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் கட்டப்பட்ட பொதுக்குளம் உள்ளது. இந்த பொது குளத்தில் ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் குளிப்பது வழக்கம்.
விழாக்காலங்களில் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த இடத்தில் ஓய்வெடுத்து குளித்துவிட்டு செல்வது வழக்கம், அது மட்டுமல்லாது ஒட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் கோவில் திருவிழாக்களுக்கு புனித நீர் எடுப்பது வழக்கம். இந்த பொதுக்குளத்தில் தினந்தோறும் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்கள் குளிப்பதற்கு தண்ணீர் நிரப்பப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் இறைச்சி கழிவுகளை கிணற்றில் கொட்டி விட்டு சென்றுள்ளார்கள், நீரின் புனிதத் தன்மை கெட்டுவிடுவது மட்டுமல்லாது அந்த பகுதியில் செல்லும் போது துர்நாற்றமும் வீசுகிறது, இறைச்சி கழிவுகள் மட்டுமல்லாது கிணற்றுக்குள் மருத்துவ கழிவுகள் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
இதுபோல ஓட்டப்பிடாரம் பெரியகுளத்தில் மதுபானங்கள் இறைச்சி கழிவுகள் குப்பைகளும் கொட்டப்படுவது இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமமுக சுற்றுச்சூழல் பிரிவு கமலக்கண்ணன் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.