பிரதமர் மோடியின் 73 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துக்கள் சொல்லி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் .
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பாஜக நிர்வாகிகள் சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ உலகாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஓட்டப்பிடாரம் பாஜரில் பொதுமக்களுக்கு மோடியின் 73வது பிறந்தநாள் என்று சொல்லி இனிப்புகள் வழங்கினார்கள்.
அதைத் தொடர்ந்து குறுக்குச்சாலையில் நிர்வாகிகள் சார்பில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஒன்றிய தலைவர் Pmm சரவணன், மாவட்ட கல்வியாளர் பிரிவு துணை தலைவர் கோயில்பிள்ளை, ஒன்றிய பொருளாளர் கதிரவன்,கல்வியாளர் பிரிவு செயலாளர் மந்திர மூர்த்தி,மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் மாரிமுத்து,மகேஷ்,வேல்முருகன்,வடக்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பிரதீப், நிகழ்ச்சி ஏற்பாடு கருப்பசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் , வாலசமுத்திரம் கிளைத் தலைவர் கனகராஜ், மற்றும் மோகன் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.