உலக வெறிநாய் நோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவ அலுவலர் ஜீவராஜ் பாண்டியன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மருத்துவர் ஜீவராஜ் பாண்டியன் பேசுகையில், செல்ல பிராணியான நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும். மேலும் வெறிநாய் கடித்தால் கடித்த முதல் நாள் மூன்றாம் நாள், ஏழாம் நாள், 28-ஆம் நாள் ஆகிய நான்கு நாட்களில் கண்டிப்பாக வெறி நாய் தடுப்பூசி போட வேண்டும் மேலும் தடுப்பூசி சரியாக எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் ஏற்படும் மயக்கம், உயிரிழப்பு போன்றவை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுக நைனார் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.