தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை நான்கு வழிச்சாலையில் தடுப்புச் சுவற்றில் ஐச்சர் வாகனம் மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது.
ஐச்சர் வாகனத்தில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு பழங்கள் ஏற்றிக்கொண்டு பிரபு வயது 40 தந்தை பெயர் டேவிட் கணேசபுரம் தூத்துக்குடியை சார்ந்த இவர் குறுக்குச்சாலை அருகில் வந்தபோது தூக்க கலக்கத்தில் சாலையின் தடுப்புச் சுவரின் மீது மோதி வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது இதில் காலில் லேசான ரத்தக்காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சம்பவம் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் பிரபுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.