கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், கூலங்கள் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் செய்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் ஆண்கள் பெண்கள் என குளித்துவிட்டு உடை மாற்றுவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சிறு கடைகளும் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளதால், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல் வால்பாறைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
வால்பாறை நிருபர்,
-திவ்யகுமார்.