கோவில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவைக்கு சிறந்த சமூக அமைப்பாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
கோவையில் இயங்கி வரும் வெண்ணிலா கலை மன்றம் மற்றும் கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மற்றும் வானொலி இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் கோவை மாவட்டத்தின் சிறந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழக பிரபல பட்டிமன்ற நடுவரும் கல்வியாளருமான பேராசிரியர் சுப மாரிமுத்து அவர்கள் கலந்து கொண்டு பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்காக விருது வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் பாராட்டு பத்திரம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர் கவியகம் மணிவண்ணன் பத்திரிக்கையாளர் பாலதமிழ்செல்வன் கோவை அகில இந்திய வானொலி பண்பலை ஸ்ரீரங்கம் முரளி மற்றும் ரத்தினம் கல்லூரி தமிழ் துறை தலைவர் பரமேஸ்வரி. கவிஞர்.ரத்தின பாரதி வெள்ளலூர் தமிழ்மன்ற நிர்வாகி ஒவியர் துரைசாமி துரைசாமி, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் விருது பெற்ற நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் ஏற்புரை வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.