சுற்றுலா பயணிகளுக்கு தடை!!- வனத்துறை தடை நேரம் தளர்த்தப்படுமா? – சமூக ஆர்வலர்கள்!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதிற்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளை ஆழியார் செக் போஸ்டில் அனுமதிக்க மாட்டோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் அட்ட கட்டி வன அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு அமல் கந்தசாமி தலைமையில் வன அதிகாரிகள் முன்னிலையில் வியாபாரி சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், டூரிஸ்ட் கார் வேன் டெம்போ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக தற்பொழுது 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது நிறுத்த வேண்டும் இப்பகுதியில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் அது வரை எப்பொழுதும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர் இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகள் கூடிய விரைவில் பேசி தகவலை தெரிவியுங்கள் என்று கூறினார்.

இது தொடர்பாக வால்பாறை வணிகர் சம்மேளனம் தொகுதி செயலாளர் சரவணன் கோரிகையில் வால்பாறை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வனத்துறை இன்றியமையாது .

கடந்த காலங்களில் வன விலங்கு தொல்லையால் இப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர் மட்டும் பகுதியில் இருக்கும் பொது மக்கள் வனவிலங்கு தொல்லையால் சுமார் 10 ஆண்டுக்கு இருந்தவர்கள் தனது வாழ்வாதாரத்தை பாதுகாக்க சமவெளிப் பகுதியான திருப்பூர் கோவை ஈரோடு சேலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று விட்டதால் வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் மிகவும் சிரமப்படுகின்றன.

இதனால் வனத்துறை தனது முடிவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எஸ்டேட் பகுதியில் இருக்கும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் அதே சமயம் வனவிலங்குகள் விரும்பி உண்ணும் உணவுகளை பயிரிட்டு பாதுகாக்க வேண்டும் எஸ்டேட் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க அகலிகளை அமைத்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும். மேலும் வனவிலங்கு பாதுகாப்போம் வனத்தை பாதுகாப்போம் என்று வனத்துறை பல லட்ச ரூபாய் செலவு செய்கிறது.

ஆனால் இன்னுமும் வால்பாறை மட்டும் எஸ்டேட் பகுதிகளில் அடர்ந்த வனப் பகுதிகளில் மரங்களை கூப்புக்காக வெட்டுகிறார்கள் இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படி இவர்களால் வண்ணத்தையும் வனவிலங்கையும் பாதுகாப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது இது குறித்து வனத்துறை பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் இது தொடர்பாக வால்பாறை இந்தியா ஜனநாயக வாலிபர் DYFI சங்கத்தின் பொறுப்பாளர் முகமது அப்துல் கூறிகையில் சுமார் கடந்த 10 ஆண்டுக்கு முன்பாக வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தக்காளி லெமன் சாதங்கள் மற்றும் பணமும் கொடுத்து இப்பகுதி மக்களுக்கே அறியாமலும் தெரியாமலும் வனத்தை பாதுகாப்போம் வனவிலங்கு பாதுகாப்பு என்று பேரணி நடத்தி அதன் மூலம் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இதே நிலை இப்பொழுதும் நீடிக்காமல் இப்பகுதியில் இருக்கும் வனத்துறை அதிகாரிகள் அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் தொழிற்சங்கங்களையும் கருத்துக்களை கேட்டு 6 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணிகளை வருகையே தடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.

வனத்துறை அதிகாரிகள் வனத்தையும் வனவிலங்கையும் பாதுகாக்க வனவிலங்கு தேவையான உணவுகளை அடர்ந்த வனப் பகுதியில் பயிரிட வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் இப்பகுதியில் மரங்களை வெட்டுவதும் தடுத்து நிறுத்த வேண்டும் வால்பாறை வளர்ச்சிக்கு வனத்துறையின் பங்கு மிகவும் இன்றியமையாது வனத்துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பொது நலத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

-P.பரமசிவம் வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp