கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வையும் அதற்கு காரணமாக இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கமும் செப்டம்பர் 7ஆம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்களும் ரயில் நிலையங்கள் முன்பாக மாபெரும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என்று வால்பாறை பகுதி காந்தி சிலை அக்கா மலை பேருந்து நிறுத்தத்திலும் மார்க்கெட் பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் துண்டு நோட்டீஸ் பொதுமக்களிடம் வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒன்றிய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி 116 சதவீதமும் டீசல் மீதான கலால் வரி 357 சதவீதம் உள்ளது இதனால் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் அதிகமாகவும் டீசல் 90 ரூபாய்க்கும் விற்கப்படுவதாலும் தற்போது சுங்க கட்டண உயர்வாள் விலைவாசி சாதாரண மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன இந்திய அளவில் படித்த இளைஞர்கள் சுமார் 6 கோடிக்கு மேல் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.
அரசுத் துறையை தனியார் துறையாக ஆக்குவதும் சாமானிய மக்கள் பாதிப்படைகிறார்கள் இதை இப்பகுதியில் இருக்கும் குறைந்த ஊதியம் வாங்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதியில் இருக்கும் ஆட்டோ வேன் பேருந்து லாரி ஓட்டுநர்கள் இதில் இருக்கும் வணிகர் இடமும் அரசு ஊழியரிடமும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்கள் நாளை ஆனைமலையில் நடைபெறும் மறியல் போராட்ட பிரச்சாரத்திலும் செப்டம்பர் 9ஆம் தேதி ஆனைமலையில் நடைபெறும் மறியலிலும் பங்கு பெற வேண்டும் என்று நிர்வாகிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
-P.பரமசிவம், வால்பாறை.