தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 29 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை மத்திய மாவட்டம் செல்வபுரம் வடக்கு கிளையின் சார்பாக நிகழ்ச்சிகள் கிளைத் தலைவர் s.ராஜா (எ) அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாபெரும் மருத்துவ முகாம் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் E.உமர் ஹாஜியார் அவர்கள் தொடங்கி வைத்தார். ஹிஜாமா மருத்துவத்தை தமுமுக மாநில செயலாளர்
குனிசை M.சாகுல் ஹமீது அவர்கள் தொடங்கி வைத்தார். சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதனை முகாம் கிளை மமக செயலாளர் Pvc சமீர் அவர்கள் தொடங்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கை முகாம் A.ஷான் பாஷா அவர்கள் தொடங்கி வைத்தார்.
(ஐந்தாம் நிகழ்ச்சியாக ) தமுமுக கழக கொடிகள் ஏற்றும் நிகழ்வு கோவை மத்திய மாவட்ட தலைவர் A.சர்புதீன் ஏற்றி வைத்தார். 86 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினறும் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் E.அகமது கபீர் MC அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் SMI மாநில செயலாளர் அம்ஜத் அலி கான் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் சகீர் மாவட்டதுணை நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் திரலானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.