ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி நேற்று கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காளிபாளையம் வார்டு எண் 15ல் சுப்பேகவுண்டர் வீதி, பழனிக்கவுண்டர் வீதி மற்றும் வார்டு எண் 2ல் ராமசாமி காலனி, வார்டு எண் 3ல் ராம் நகர் போன்ற இடங்களில் 99 லட்சத்தில் தார் சாலை பணிகளையும், ஜமீன் ஊத்துக்குளி வார்டு எண் 1ல் கிழக்கு தோட்டத்து பங்களா சாலை ரோடு முதல் பாலக்காடு ரோடு வரை ₹79.60 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் திட்டத்தையும்,
ஜமீன் ஊத்துக்குளி வார்டு எண் 1ல் மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை ₹184 லட்சத்தில் அமைக்க பணிகளையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி அவர்கள், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்தூர்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.