கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இந்த எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் ஒரு சில பாதைகள் மிகவும் தரம் அற்றதாகவும் பழுதடைந்தும் உள்ளது வால்பாறை அடுத்துள்ள கரு மலை, ஊசி மலை, ஊசிமலை டாப், வெள்ள மலை, வெள்ள மலை டாப், காஞ்ச மலை தெற்கு ஆகிய பகுதிகளில் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது.
இதனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பழுது ஏற்பட்டு நடுவழியில் நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது அரசு பஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லும் பொழுது பழுது ஏற்பட்டு நடுவழியில் நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த சாலையில் வாகனத்தை இயக்கம் வாகன ஓட்டுனர்களும் வாகன பழுது ஏற்படுவதினால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த தரமற்ற சாலையால் அடிக்கடி கோர விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை புதுப்பித்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
-திவ்யகுமார், வால்பாறை.